வெற்றி நமதே – சே குவேரா படைப்புகளும் உரைகளும்

Publisher:
Author:

70.00

வெற்றி நமதே – சே குவேரா படைப்புகளும் உரைகளும்

70.00

எத்தனையோ போராளிகள் சமூகத்திலிருந்து உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் சே குவேரா ஒரு தனிவகையானவர். சாமான்யர்கள் அவரை எட்டிப்பிடிப்பதற்கு நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் மந்திரச்சொல்லாக அவர் நீடிக்கிறார். மக்களின் அதிகாரத்தை நிறுவுவதே அவரது வாழ்வின் நோக்கம். அதை நோக்கிய பயணத்தில் ‘வெற்றி அல்லது வீரமரணம்’ என்கிறார் அவர். அவரது பயணத்தில் அவர் பெற்ற வெற்றிகள் அழிக்க முடியாதவை. அவை இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நம் மீது தாக்கங்களை செலுத்திக்கொண்டிருக்கின்றன.

அத்தகைய சேகுவாராவின் சிந்தனைகளை அவரது எழுத்துகளின் மூலமாக அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

கியூபாவின் விடுதலைப் போராளி ஜோஸ் மார்ட்டியின் வரிகளோடு ஒரு கட்டுரையை சே குவாரா தொடங்கியிருக்கிறார். “ இது உலைகளின் காலம். ஜுவாலைகளுக்கு மட்டும்தான் இங்கு இடம்” என்கிறது அது. அவர் வாழ்க்கையைப் பார்த்தவிதத்தையும் அதில் தனது இடத்தை புரிந்துகொண்ட விதத்தையும் அது காட்டுகிறது. அற்பத்தனங்கள் அணுக முடியாத ஜுவாலையாக அவர் நின்று எரிகிறார். அந்த வெப்பத்தை நீங்கள் புத்தகத்தில் உணரலாம். அவரது வரிகளின் உணர்ச்சியாக ஜொலிக்கும் ஜுவாலையை நீங்கள் உணருங்கள். நமது மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை எரிக்கும் ஜுவாலையாக நீங்கள் மாறுங்கள்.

 

Delivery: Items will be delivered within 2-7 days