1000 கடல் மைல்

Publisher:
Author:

235.00

1000 கடல் மைல்

235.00

1000 Kadal Mayil 

உலகக் கடற்பரப்பெங்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கப்பல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடலிலும் கடற்கரையிலும் பல்லாயிரம் கோடிகள் புதுப்புது தொழில் முதலீடுகளாய்க் கொட்டப்படுகின்றன. வளர்ச்சியை முன்னிட்டுக் கடற்கரைகளில் பிரம்மாண்டமான தொழில் கட்டுமானங்கள் உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கும் கடல், வரலாற்றுக்கு முன்பே அதனுடன் ஒட்டி உறவாடி வாழ்ந்துவரும் கடலர்களுக்கு மட்டும் பேரச்சம் தருவதாகிக் கொண்டிருக்கின்றது. கடலின் அடிப்படைப் பண்புகள் ஆதியிலிருந்தே மாறியதே இல்லை. இயற்கைச் சீற்றங்கள் மனிதப் பேரிடர்களாக அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.

எண்ணைத் துரப்பண, எரிவாய்வுத் திட்டங்கள், அனல், அணுமின் நிலையங்கள், பெருந்துறைமுகங்கள், எட்டுவழிச் சாலைகள் – இவற்றில் எதுவும் தனித்த திட்டமல்ல, பல்திணைக் குடிகளின் இயல்பு வாழ்வின் மீதாக உருக்கொள்ளும் கூட்டு வன்முறை. இந்த வலி மிகுந்த எதார்த்தம் எதிர்காலத்தின் மீது சூன்யமாய் நின்று நம்மை அச்சுறுத்துகிறது.

நவம்பர் 2017 ஒக்கிப் புயல் புலப்படா மக்களின் மீது கவிந்த புலப்படாப் பேரிடர். 2004 சுனாமிப் பேரிடர் போலன்றி, வருவாய் ஈட்டும் 230க்கும் மேற்பட்ட மீனவர்களை ஆழ்கடலில் தேர்ந்து கொன்ற பேரிடர். பேரிடரின் துயரும் சுமையும் பெண்களைக் கரையில் அபலைகளாக்கி நிறுத்தியது. பேரிடர் கதைகள் பொதுவாக ஆண்களின் தரப்பிலேயே சொல்லப்படுகிறது. பெண்ணின் கண்கள் வழியாக ஒரு பேரிடரை நாம் பார்க்கத் தொடங்கவில்லை. தற்கொலை விளிம்பில் தள்ளப்பட்டிருக்கும் அவர்களுக்குச் சமூகம் என்ன உத்தரவாதம் தரப்போகிறது?

ஒக்கிக் கடல் சாவுகளின் பின்னணியில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலின் அபாயங்களையும் பாதுகாப்புக் கூறுகளையும் தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஒக்கி மரணங்கள் கடலின் பிழையா, அரசின் பிழையா, மீனவர்களின் அலட்சியத்தின் விளைவா? முன்னெச்சரிக்கை, தகவல் தொடர்பு, பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த அவல மரணங்களைத் தவிர்த்திருக்க முடியுமா?

-முன்னுரையிலிருந்து

Delivery: Items will be delivered within 2-7 days