101 – திரைக்கதை எழுதும் கலை

Publisher:
Author: ,

236.00

Out of stock

திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சிகளை விளக்குகிற புத்தகங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால், இந்நூல் அவைகளிலிருந்து வித்தியாசப்படுகிறது.அதாவது, சிறந்த திரைக்கதை ஆசிரியர்களிடம் சென்று, “நீங்கள் சிறப்பாக திரைக்கதை எழுத என்ன காரணம்?” என்ற கேள்வியை முன்வைக்கிறது.  அவர்கள் கூறியதிலிருந்து, திரைக்கதை எழுதுவதற்கு முன்னால் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளத் தேவையான 101 குறிப்புகள் மற்றும் திரைக்கதை எழுதும்பொழுது நீங்கள் பின்பற்ற வேண்டிய 101 குறிப்புகள், ஆக மொத்தம் 202 ரகசியங்கள்  இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இதனைப் படிக்கையில், திரைக்கதை எழுதுவதற்கு ஏற்ற நேரம் எது? ’கதைக்கரு’க்களை எப்படிக் கண்டுபிடிப்பது?அதை எப்படி  திரைக்கதையாக்குவது? எழுதிய திரைக்கதையை எப்படி விற்பது? போன்ற பல முடிச்சுகள் அவிழ்கின்றன. ஒரு கதை குறித்து யோசித்து வைத்திருப்போம். ஆனால், அவற்றைக் காகிதங்களில் எழுதி வைப்பதோ அல்லது அதை மேலும் விரிவாக்கி திரைக்கதையாக மாற்றுவது குறித்தோ, அவ்வளவு தயங்குகிறோம். சிட் பீல்ட், ப்ளாக் ஸ்னைடர், ராபர்ட் மெக்கி போன்றோரது திரைக்கதை நுட்பங்கள் தெரிந்திருந்தாலும், எழுதுவதில் பயம்.  Writer’s Block –  இதிலிருந்து  எப்படித் தப்பித்து வெளியே வருவது, என்பதற்கான பதில் இப்புத்தகத்தில் உள்ளது.
திரைக்கதை மருத்துவர்  இப்புத்தகத்தின் வாயிலாக உங்களுடனேயே இருக்கிறார். ’திரைக்கதை எனும் திரைக்கலை’ உங்களுக்கும் வசப்படும்.  இனிமேல் திரைக்கதை சார்ந்து எழும் சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும்  101-ஐ திறப்போம். 

Delivery: Items will be delivered within 2-7 days