ஆரம்பத்தில் அப்படித்தான்

Publisher:
Author:

55.00

ஆரம்பத்தில் அப்படித்தான்

55.00

ஆரம்பத்தில் அப்படித்தான் – பாக்யா வார இதழில் தொடர் கதையாக வெளிவந்த நாவல். பொதுவாக பத்திரிகைகளில் இருந்து தொடர் கேட்டு கடிதம் வரும்போது உங்கள் தொடர் கதை தேவை என்றுதான் வரும். பாக்யா ஆசிரியர் ‘உங்களிடமிருந்து ஒரு காதல் தொடர் கதையை எதிர்பார்க்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக கதைகளை உருவாக்குவதைவிட, கதா பாத்திரங்களை உருவாக்குவது என்பது சிரமமான, எனக்குப் பிடித்தமான விஷயம். ஒரு கதையின் தலைப்பைக் குறிப்பிட்டால் அந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயர் பளிச்சென்று நினைவிற்கு வர வேண்டும் என்பது எண்ணம்.

சில நேரங்களில் சில மனிதர்கள் என்றால்… கங்கா!
மரப் பசு என்றால்… அம்மிணி!
மெர்க்குரிப் பூக்கள் என்றால்… சிவசு!
நாயகன் என்றால்… வேலு நாயக்கர்!
அதேபோல் ‘தொட்டால் தொடரும்’ என்றால்… ஸ்ரீராம்!

இந்தக் கதையில் அப்படி பளிச்சென்று எல்லாப் பாத்திரங்களையும் தள்ளிக் கொண்டு மேலே வருபவள் மலர்விழி! மிக எச்சரிக்கையாக செதுக்கப்பட்ட பாத்திரம் இவள். கொஞ்சம் தடுமாறினாலும் தூக்கி குப்பையில் வீசிவிடுவார்கள். ஒருவனிடம் தன்னை இழந்து, இன்னொருவனை மணக்கிற விஷயத்தை யோசித்து யோசித்து கன்வின்ஸ் செய்து எழுத வேண்டும்.

அப்படி எழுதியிருக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்த நாவலை மிக நேர்த்தியாக, ஆர்வமாக வெளியிட்டுள்ள பூம்புகார் பதிப்பகத்திற்கு என் நன்றி; கையில் தாங்கியுள்ள உங்களுக்கும்தான். 

பிரியங்களுடன்,

பட்டுக்கோட்டை பிரபாகர்

Delivery: Items will be delivered within 2-7 days