ஆசீவகமும் ஐயனார் வரலாறும் 

Publisher:
Author:

680.00

Out of stock

Aasivagamum Ayyanar Varalarum

Dr. K. Nedunchezhiyan

 

” ..ஏரிக்கொரு ஐயனார், ஊருக்கொரு பிடாரி என்ற சொலவடைக்கேற்ப தமிழக நிலவிரிவில் ஐயனார் கோயில்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இந்தக் கோயில்கள் ஆசீவகம் விட்டுச்சென்ற அடையாளங்கள் என்கிறார் நெடுஞ்செழியன். இந்தப் புள்ளியிலிருந்து ஆசீவகம் தோன்றியது தமிழகத்தில்தான் போன்ற தன் வாதங்களை முன்வைக்கிறார். மகாவீரரின் சம காலத்தவரான மக்கலி கோசலரால் நிறுவப்பட்ட இந்த மதத்துக்கு இந்தியாவில் பரவலாக ஆதரவு இருந்தது. “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்திய சமய வரலாற்றிலும் இந்தச் சமயம் வழங்கிய கொடை மகத்தானது” என்கிறார் நூலாசிரியர். இங்கு உருவாகி இந்தியாவெங்கும் பரவிய இந்தச் சமயத்தின் வரலாற்றில் திருவெள்ளறை ஒரு முக்கியமான இடம். தமிழகத்தில் ஆசீவகத்தின் தொல்லெச்சங்கள் இன்னும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன. ஆகவே, அவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது ஆசிரியரின் நிலைப்பாடு. இன்று கற்படுக்கைகளுடன் கூடிய சமணக் குகைகள் என்று தொல்லியலாளர்களால் அறியப்படும் பல பாறைக் குடில்கள் ஆசீவகத் துறவிகள் இருந்த இடங்கள்தான் என்பது நெடுஞ்செழியனின் நிலைப்பாடு…”தி இந்து

Delivery: Items will be delivered within 2-7 days