தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்

Publisher:
Author:

170.00

தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்

170.00

Desa Thanthaigal

Rajmohan Gandhi

 

மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோரின் சிந்தனைகளின், நடவடிக்கைகளின் விளைவாக அந்நாளில் நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை – வேறு மாதிரியாக உருவாக்கியிருக்க முடியுமா? என்பதை ஆராயும் நூல்.
 குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி சச்சிதானந்த், காந்தி மற்றும் நேருவைப் பற்றி வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெர்ரி ஆண்டர்சன் எழுதிய “தி இந்தியன் ஐடியாலஜி’ என்ற நூலில் வைக்கப்படும் கருத்துகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
 காந்தி பிரிவினையை ஆதரித்தார் என்பது அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. காந்தி பிரிவினையை ஆதரிக்கவில்லை; வேறு வழியில்லாமல் அவர் பிரிவினைக்கு ஒத்துக் கொண்டார் என்பதை இந்நூல் விளக்குகிறது.
 நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் கருத்து மோதல்கள் இருந்தாலும், ஆச்சரியப்படும் வகையில் இருவரும் இணைந்தே பல முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டனர் என இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது. காந்தி, அம்பேத்கர் ஆகியோருக்கிடையிலான முரண்பாடுகளைப் பற்றியும் விவரிக்கிறது. நாட்டின் இன்றைய முக்கிய பிரச்னைகளுக்கான காரணங்களைத் தேடும் ஆர்வலர்களுக்குப் பயன்படும் நூல்.

நன்றி – தினமணி

Delivery: Items will be delivered within 2-7 days