கோபுரத் தற்கொலைகள்

Publisher:
Author:

100.00

கோபுரத் தற்கொலைகள்

100.00

தமிழகத்தின் கடந்த காலச் சமூக, பண்பாட்டு வரலாற்றில் சைவம் வைணவம் என்ற இரு வைதீக சமயங்களும் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இது இன்றும் கூட வேறுவடிவில் தொடர்கிறது. மற்றொரு பக்கம் வைதீக சமய நெறியுடன் முரண்பட்ட அவைதீக சமயங்களான சமணமும் பவுத்தமும் தமிழ்நாட்டில் நிலைபெற்று செல்வாக்குடன் திகழ்ந்துள்ளன. அத்துடன் அடித்தளமக்களின் நாட்டார் சமய நெறியும் சமய எல்லைக்குள் இருந்துகொண்டே கலகக் குரல் எழுப்பிய சித்தர்களின் நெறியும் புறக்கணிக்க இயலாத இடத்தில் நிலைகொண்டிருந்தன. இப்போக்குகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட இந்நூல் தமிழில் உருவான பக்தி இலக்கியங்களையும் கல்வெட்டுகளையும், வரலாற்றாவணங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, சமயங்கள், சமய இயக்கங்கள் என்பனவற்றின் பின்னால் உள்ள அரசியலை இந்நூல் வெளிப்படுத்துகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days