இது தெரியாமப் போச்சே!

Publisher:
Author:

250.00

இது தெரியாமப் போச்சே!

250.00

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (945) உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவை உண்ண வேண்டும். அதிலும் தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவுக்கு அளவு வைத்து உண்ண வேண்டும். இப்படி உண்பதால் உயிருக்கு எந்த ஊறும் இல்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், மாறுபாடு ஏற்படுத்தாத இல்லாத உணவை தற்போது தேடித்தான் உண்ண வேண்டி யுள்ளது. எனினும் இப்போக்கை மாற்ற முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது இந்த நூல். காய்கறிகளின் குணம், கீரைகளின் பலன், சத்துள்ள உணவு எது? என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். வரலாற்றுப் புகழ் வாய்ந்த நம் பாரம்பர்ய தாளிப்புப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், அவற்றுள் புதைந்திருக்கும் நன்மைகளை விட்டுவிட்டு மக்கள் துரித உணவுகளை நாடியதால் ஆரோக்கியத்தை இழந்துபோயினர். அவற்றை மீட்டெடுக்கும் வழிமுறைகள் ஏராளம் உள்ளது இந்த நூலில். நல்ல உணவு எது என்று தேடி, கண்டு, அதை உண்டு, உடலுக்கு ஆரோக்கியம் தந்து, உயிருக்கு வாழ்வளிப்போம்! வாருங்கள்… உணவின் ரகசியம் அறிய!

Delivery: Items will be delivered within 2-7 days