இந்திய நடிப்பு இலக்கணம்

Publisher:
Author:

330.00

இந்திய நடிப்பு இலக்கணம்

330.00

 

தமிழகத்தின் மிக முக்கியமான ’தியேட்டர் லேப்’ நடிப்புப் பயிற்சி மையத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனர். 1983-இல் ஒரு நாடக நடிகராக தனது பயணத்தைத் துவங்கிய ஜெயராவ் அவர்கள் கூத்துப்பட்டறையின் மூத்த நடிகரும் பயிற்சியாளருமாக இருந்தவர். தெருக்கூத்து, பறையாட்டம், கோலாட்டம், துடும்பாட்டம், சிலம்பம், சரளா, களரி, தாய்-ச்சி, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற கலை வடிவங்களில் தேர்ச்சி பெற்றவர். சென்னையில், மேற்கத்தியமயமாக்கல் காரணமாக கிட்டத்தட்ட மறந்தபோன இந்த கலை வடிவங்களைக் கற்பிக்கும் வெகு சிலருள் இவரும் ஒருவர்.
2003-ஆம் ஆண்டில் ’அப்பாவும் பிள்ளையும்’ என்ற நாடகத்தில் தனி ஒருவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தெரு நாடகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் என அவர் பலவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கூத்துப் பட்டறையில் தனது விரிவான பயிற்சிக்குப் பிறகு அவர் தனது நடிப்புப் பள்ளியைத் துவங்க முடிவு செய்தார். அதன்படிதான் 2005ஆம் ஆண்டு ‘தியேட்டர் லேப்’ நடிப்புப் பயிற்சி மையம் உருவானது. அப்போதிருந்து தியேட்டர் லேப் அனைத்து தரப்பு மக்களையும் தொழில்முறை நடிகர்களாக மாற்றுவதில் இன்றுவரை நீண்ட பயணத்தைக் கடந்துவந்திருக்கிறது. இது புதிய மற்றும் தொழில்முறை நடிகர்களுடனும், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடனும் இணைந்து எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றியுள்ளது.
இந்தப் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது, இந்தச் சமூகத்திற்கு அம்மனிதர்கள் எதையாவது திருப்பித் தரவேண்டும் என்று நம்பும் ஜெயராவ் சேவூரி அவர்கள்,  ஜென் தத்துவார்த்த முறையினை நடிப்பிலும் பின்பற்றும் வகையில் பயிற்சிகளை உருவாக்கியுள்ளார். ’ஜென் இன் தியேட்டர்’ எனும் இப்புத்தகம் நடிப்பிற்கான இலக்கணங்களை எளிய முறையில் கற்றுத்தரும் வகையில் படைத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் அவரது சாதனைகள்:
1999 – புது தில்லி இந்திய மனிதவள மேம்பாட்டு அரசாங்க அமைச்சகத்திலிருந்து தென்னிந்தியாவின் நாட்டுப்புற கலைத்துறையில் ஜுனியர் ஃபெல்லோஷிப் விருது.
2009 – திருப்பூர் அரிமா குழு – கலை இலக்கிய சங்கத்தின் சிறந்த இயக்குனர் நாடக விருது. இந்த மதிப்பு மிக்க விருது ஒரு நாடகத்துறைக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

 

Delivery: Items will be delivered within 2-7 days