கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்

Publisher:
Author: ,

200.00

கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்

200.00

இந்த நூலை வெறும் “வாழ்க்கை வரலாற்று நூல்” என்பதைவிட – ஒரு திராவிட இயக்க வரலாற்று நூலாகவே நான் பார்க்கிறேன். “அண்ணன்” போன்ற அன்றைய இளைஞர்களின் பணியைப் பறைசாற்றும் இந்த நூல் இன்றையக் கழகத் தோழர்கள் மற்றும் இளைஞர்களின் இல்லங்களில் இடம்பெற வேண்டும் என்று விழைகிறேன். – மு.க ஸ்டாலின்  தலைவர், தி.மு.க 

1952 – ஆம் ஆண்டிலிருந்தே மாணவர் திமுக பொறுப்பு, பொள்ளாச்சி வட்டக் கழக செயலாளர், 1978 ஆம் ஆண்டிலிருந்து கோவை மாவட்ட தி.மு.க செயலாளர் எனத் திறம்பட பணியாற்றியதால் அவரது செல்வாக்கு வளர்ந்தது. அவரது அரசியல் பயணத்தில் விலைவாசிப் போராட்டம், இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், மிசாக் கைதியாக சிறை கொட்டடிக் கொடுமைகளை இயக்கத்திற்காக ஏற்றது ஆகியன பாராட்டத்தக்கது. நெருக்கடி காலத்தில் கழகத் தலைவர் கலைஞர் அவர்களிடம் பணியாற்றிய வாகன ஓட்டுநர்கள் அனைவரும் விட்டுச் சென்ற நிலையில், திரு மு கண்ணப்பன் அவர்கள் தலைவருக்காக வாகனம் ஓட்டும் பணியை மேற்கொண்டதை, தலைவர் கலைஞர் அவர்கள் ‘காரோட்டிக் கண்ணப்பன்’ எனப் பெருமைப்பட மேடைகளில் புகழ்ந்தார். – க.அன்பழகன்  பொதுச் செயலாளர், தி.மு.க

Delivery: Items will be delivered within 2-7 days