₹10.00
கழக அரசின் 2008 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்களை விளக்கும் வகையில் தமிழக ஆளுநர் அவர்கள் கடந்த 23-1-2008 அன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரை பல்வேறு அரசியல் கட்சிகள், ஏடுகள் ஆகியவற்றின் பாராட்டைப் பெற்றது.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான நல்ல திட்டங்கள், தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தல், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களான அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு, என பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அவற்றைப் பற்றியெல்லாம் எதுவும் பேசாமல், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று உண்மைக்கு மாறான காரணங்களை கூறியும், நிதியமைச்சர் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இத்தகைய பொய்குற்றச்சாட்டுகளை முனை முற்யும் வகையில் சட்டப்பேரவையில் ஆற்றிய பதிலுரை, அதனை தொடர்ந்து முரசொலியில்எழுதிய கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இச்சிறு நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பொய்யான வாதங்களால் கழக தோழர்கள் திசை திரும்பி விடாமல் தாமும் தெளிவு பெற்று தமிழக மக்களுக்கும் உண்மை நிலையை விளக்க தலைவர் கலைஞர் அவர்களின் தெளிவான விளக்கங்கள் வழி வரும் என உறுதியாக நம்புகிறோம்.
– திராவிட முன்னேற்றக் கழகம்
Reviews
There are no reviews yet, would you like to submit yours?