லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

Publisher:
Author:

95.00

லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

95.00

Lightta Poramaippadum Kalaignan
 Isai

 

 

பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லாத புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமிழ்க் கவிதைகளைப் பற்றி அக்கறையுடன் பேசும் அதே சொற்கள்தான் வடிவேலுவின் வசனங்களையும் மணியன்பிள்ளையின் சாகசங்களையும் சிறப்பித்துப் பேசுகின்றன. பொதுப்புத்தியி லிருந்து விலகி தனக்கான ஒற்றையடிப் பாதையில் முதலடி வைக்கும் பித்துமனத்தின் தத்தளிப்புகளே இக்கட்டுரைகளுக்கு உரமேற்றியுள்ளன. இசையின் மொழிதலில் முந்திக்கொண்டு நிற்கிற எள்ளலும் கேலியும் தாங்கவொணா துக்கத்தின், விழுங்க முடியா கசப்பின், உச்சகட்ட வெறுப்பின் திரிபுகளேயன்றி வேறல்ல. வெறுமனே சிரிப்பு மூட்டுவதல்ல அவற்றின் உத்தேசம். எதிர்மறை இருளில் திளைப்பது போன்று தோற்றம் தரும் இக்கட்டுரைகள் உண்மையில் உத்தேசிப்பது ஆழத்தில் மங்கித் தென்படும் ஒளியையே. இசையின் இடித்துரைத்தல்கள், தலைகனத்த புலமையின் விமர்சனங்கள் அல்ல. கரிசனையும் அக்கறையும்கூடிய உரையாடல்களே.

– எம். கோபால கிருஷ்ணன்

Delivery: Items will be delivered within 2-7 days