மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு

Publisher:
Author:

Original price was: ₹200.00.Current price is: ₹185.00.

மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு

Original price was: ₹200.00.Current price is: ₹185.00.

Maveerargalin Maraikkappatta Varalaru

 

நாகை மாவட்டம் – மயிலாடுதுறை வட்டம் பகுதியில் நிலவிய சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வீரமிக்க தலித் போராளிகள் நடத்திய வியப்பூட்டுகிற போராட்டங்களையும், தாக்குதல்களையும் அவர்களின் விலைமதிப்பில்லா தியாகங்களையும் நெஞ்சுருகப் பதிவு செய்துள்ள இந்நூல், உண்மையில், தலித் மக்களின் மறைக்கப்பட்டதொரு வீரவரலாற்றை வெளிக்கொண்டுவந்துள்ளது.

தலித் மக்கள் மீது தங்கு தடையற்ற வகையில் நடத்தப்பட்ட உழைப்புச் சுரண்டலையும், பாலியல் வன்கொடுமைகளையும், காவல்துறையின் கொடிய ஒடுக்குமுறைகளையும் சந்தித்து, சாதிவெறிகொண்ட கொடிய சமூக விரோத சக்திகளையும் நேருக்கு நேராகக் எதிர்கொண்டு போராடிய தலித் இளைஞர்களின் துணிச்சலை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும், சாதி வெறியர்கள் – காவல்துறையினர் – அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியாகவே எப்போதும் இருந்து விளக்கும் இந்நூல், அந்தக் கொடிய கூட்டுச்சதியினை முறியடிக்க தலித் மக்கள் துணிச்சலுடன் களம் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஆழமாக உணர்த்துகிறது.

வீரார்ந்த வரலாற்றின்மீது அக்கறைகொண்டிருக்கும் ஒவ்வொரு தலித் இளைஞனும் வாசித்தறிய வேண்டிய நூல் இது.!

Delivery: Items will be delivered within 2-7 days