மோகவல்லி தூது

Publisher:
Author:
(1 customer review)

67.00

மோகவல்லி தூது

67.00

பாண்டியர்கள் மதுரையை ஆண்ட பிறகு அவர்களது ஸ்தானத்திற்கு வந்தவர்கள் நாயக்கர்கள். விஜய நகர அரசருக்கு உட்பட்டு மதுரை ராஜ்யம் முழுவதும் அவரது வசமாயிற்று.

வடக்கே விஜயநகரம் தொடங்கி, தெற்கே கன்னியாகுமரி வரையும் அவர்களது ஆட்சி நீண்டது. அப்பொழுது மதுரையை ஆண்டவர்கள் மிகப் பலவீனமானவர்கள். எனவே அந்தத் தென்னாட்டில் குழப்பமும், கலகமுமாக இருந்தது.

பாண்டிய மன்னன் தன் விருப்பப்படி வாழ ஆரம்பித்தான். சில கூட்டுச் சேர்க்கை சேர்ந்து கொண்டு விஜய மன்னருக்குப் பெரும் கவலை கொடுக்க ஆரம்பித்தான். இந்த நிலையில் ஒருநாள் விஜயநகர மன்னர் மிகவும் நொந்து போய்விட்டு, தமது அரச சபையில் கூறினார்.

‘இந்தப் பாண்டிய அரசுகளை அழித்து விட்டு, அங்கே நம் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு ஒரு தகுதியான ஆள் நம்மிடம் இல்லையா? இது வருத்தமாக இருக்கிறதே” என்று கூறினார்.

அதற்குப் பதில் கூறுவது போல் எழுந்தார் ஒரு வீரர். அவர் பெயர் நாகம நாயக்கர். “மதுரையை அடக்குகிறேன்” என்று சென்றார். அடக்கினார். அங்கே ஆட்சியை நிலைநிறுத்தினார். அப்படி அவர் நல்ல அரசை அமைத்து வாழும்போது அவரே விஜய நகர பேரரசை எதிர்க்க ஆரம்பித்தார். இது அந்த அரசருக்குப் பெரும் துரோகமாகத் தோன்றியது. அரசர் வெகுண்டு எழுந்தார். “இந்த நாகம நாயக்கரை எதிர்ப்பதற்கு யாரும் இல்லையா?” என்று சபையில் அறை கூவினார்.

அப்பொழுது எழுந்தார் ஒரு வீரன். அவனைப் பார்த்து சபையினர் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். எனில், அந்த வீரன் யாருமல்ல, மதுரையில் அப்பொழுது ஆண்டு வந்த விஜய நகருக்குத் தலைவலி கொடுத்து வந்த நாகம நாயக்கரின் மகன்தான் அவன். “என்ன இது மகன் தந்தையை எதிர்ப்பதா?” என்று கேட்டார்கள் எல்லோரும். இது சரித்திரத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி. இதை வைத்துத்தான் இந்தக் கதை புனை சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்தக் கதை ஒரு பிரபல வெளிநாட்டுக் கதைப் போன்று இருக்கிறது. ரஸ்தம், ஷொராப் என்ற தந்தையும், மகனும் எதிர் எதிராக நின்று சண்டையிட்டார்கள். அந்தக் கதை பிரசித்திப் பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்று தான் இந்தக் கதையும். அந்த வீர இளைஞன் மதுரை சென்று தந்தையை எதிர்த்தானா? அவரை ஜெயித்தானா? பிறகு தந்தையை என்ன செய்தான்?  என்பனவெல்லாம் இந்தத் தொடர் நாவலைப் படிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். அற்புதமான வரலாற்றுக் கதை இது. அந்நாளைய பழக்க வழக்கங்களைப் பற்றி நிறைய எழுதப்பட்டு இருக்கிறது.

சமூக வாழ்வு எப்படி இருந்தது என்பதை இந்தக் கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. தென்னாட்டில் எப்படி ஒரு நாயக்க வம்சம் தொடங்கி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தது என்பதையும் விளக்குகிறது இந்த நாவல். இது ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்தது. அப்பொழுது நிறைய பேர் கவனத்தைக் கவர்ந்தது. இதன் நடையை ரசித்தவர்கள் பலர். புனையப்பட்டிருந்த கதையை ரசித்தவர்கள் பலர். இப்படி பல தரத்தாரும் ரசிக்கும் வண்ணம் எழுதப்பட்ட இந்தக் கதைதான் இங்கே புத்தக வடிவில் வந்திருக்கிறது.

– ஸ்ரீ வேணுகோபாலன்

 

Delivery: Items will be delivered within 2-7 days