நான் வந்த பாதை

Publisher:
Author:

470.00

நான் வந்த பாதை

470.00

Nan Vandha Paathai

உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரான முதல் நடிகர்.
எஸ்.எஸ்.ஆர் அவர்கள் ‘நடந்து வந்த பாதை’ என்று தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை தன் வாழ்க்கையை இளம் பிராயத்தில் இருந்துத் துவங்கிச் சொல்லிக் கொண்டு வருகிறார். கடந்த பத்தாண்டுக் காலமாக அவர் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதியவையே இந்நூல். எஸ்.எஸ்.ஆர். தன்னுடைய வரலாற்றை முழுமையாக எழுதியிருக்கிறார்.
அரசியல், கலை உலக வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைப் பற்றியும் எஸ்.எஸ்.ஆர். எழுதியிருக்கிறார். அவரின் முழுமையான ஆளுமை இதில் பளிங்கு போல் பிரதிபலிக்கவே செய்கிறது.
குழுந்தையைப் போன்ற பளீர் சிரிப்பு, எல்லோருக்கும் உதவும் உள்ளம், தன் வீடிற்கு வரும் எல்லோரும் சாப்பிட்ட பிறகே செல்ல வேண்டும் என்ற அன்பான உபசரிப்பு, பசும்பொன் தேவரின் மேல் காடும் பணிவான மரியாதையும் அன்பும், அண்ணாவின் மேல் இந்த கணம் வரை இருக்கும் தீராத பேரன்பு, நடிகர்களுக்கே உரிய உணர்ச்சிக் கொந்தளிக்கும் குணம், தன்னுடன் பழகும் எல்லோரையும் அன்பால் அரவணைக்கும் உயர்ந்த பண்பு, கொண்ட கொள்கைக்காக எதையும் இழுக்கும் துணிவு, பிரச்சனை என்றால் துணிந்து நின்று செயலாற்றும் வேகம், எளிதாகக் கோபப்பட்டு விட்டாலும், கோபம் குறைந்த அடுத்த விநாடியே கோபம் கொண்டவரிடமே அன்பாகப் பேசும் பக்குவம், நிரந்திர விரோதம் என்று எதையும் கொள்ளாமல் எளிய மனுதுடன் வாழ்வை அமைத்து கொண்டது, அழகான பெண்களில் மேல் கூடுதல் பரிவு, தான் இருக்கும் இடத்தை நகைச்சுவை பேச்சால் நிறைக்கும் ரசனை எல்லாம் கலந்த ஓர் ஆளுமையே எஸ்.எஸ்.ஆர்.  

Delivery: Items will be delivered within 2-7 days