நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

Publisher:
Author:

122.00

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்

122.00

Nathimel Thanithalaiyum Sirupul

Devakanthan

ஒரு நகரமென்பது காமத்தில் வதங்கிக் கொண்டிருப்பதில்லை. காமத்தில் வதங்கிக்கொண்டிருக்கும் நகரம் நகரமாக இருக்காது. அவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில் நகைச் சுவையாக ஒரு நண்பன் சொன்ன பிரெஞ்சுக் கதையொன்று அப்போது அவருக்கு ஞாபகமானது. ஒரு நகரசபை நகர எல்லைக்குள்ளிருக்கும் அத்தனை பாலியல் தொழிலாளர்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்துள் வெளியேற வேண்டுமென ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. நகரத்தின் ஒழுக்கமும், தூய்மையும், சட்ட ஒழுங்குகளும் சீரழிகின்றதாய் அது காரணம் சொன்னது. அவர்களும் மெல்லமெல்ல அந்நகரத்தை விட்டு வெளியேறி நகர எல்லைக்கப்பால் ஒரு வெளியில் கூடாரங்களை அமைத்து தங்க ஆரம்பிக்கிறார்கள். நகரத்தின் – தேவை நகர எல்லைக்கப்பால் போய்விட்டதும் நகரம் தவித்துப் போகிறது. அது தன் தேவைகளைத் தேடி கூடாரங்களை அணுகுகிறது. நாளடைவில் தற்காலிக கூடாரங்கள் வீடுகளாகின்றன. வீடுகளுக்குத் தேவையான பொருள்களை ! வழங்க கடைகள் தோன்றுகின்றன. கடைகள் மிகமிக குடியேற்றம் கிராமமாகிறது; பின் பட்டணமாகிறது: அதுவே நாளடைவில் நகரமாகின்றது. முந்திய நகரம் தன் வளமும் வீறும் தேய்ந்து பார்த்துக் கிடக்கின்றது. ஒரு நகரம் காமத்தின் வடிகாலின்றி அமைக்கப்பட முடியாதது. !
நூலிலிருந்து…

Delivery: Items will be delivered within 2-7 days