Description
இந்தத் தொகுப்பு ஜாதி சங்க மாநாடுகள், ஜாதி ஒழிப்பு மாநாடுகள் ஆகிய இரண்டு தளங்களில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் அவை தொடர்பாக அவர் எழுதிய தலையங்கங்கள், செய்திக் குறிப்புகள், அறிக்கைகள் முதலானவையும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 1926 முதல் 1973 வரையான நீண்ட காலத்தினூடாகப் பயணித்த பெரியாரின் சாதி ஒழிப்பு வாதத்தை முழுமையாக உருதிரண்ட தோற்றத்தில் காட்டுகின்றன.