நமக்கு ஏன் இந்த இழிநிலை?

Publisher:
Author:

190.00

நமக்கு ஏன் இந்த இழிநிலை?

190.00

Namakku Yeen Indha Iizhinilai?

இந்தியா ஒரு நாடு என்கிறாயே, நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிறாய். எங்களிடம் உண்மையில் நேசமாக நடந்து கொள்கிறாயா? நான் தான் கேட்கிறேன். உனக்கும் எனக்கும் என்ன உறவு? நீ யாரு? நான் யாரு? எப்படி நமக்குள் சம்பந்தம்? எதில் ஒற்றுமை இருக்கிறது உனக்கும் எனக்கும் நீ பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்கிறாய். என்னைக் காலில் பிறந்தவன் என்கிறாய். இந்த இலட்சணத்தில் நான் உன்னோடு இணைந்தே இருக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்துகிறாய்

(பெரியார் சொற்பொழிவு, விடுதலை (9.12.1973)

இந்தத் தொகுப்பு ஜாதி சங்க மாநாடுகள், ஜாதி ஒழிப்பு மாநாடுகள் ஆகிய இரண்டு தளங்களில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் அவை தொடர்பாக அவர் எழுதிய தலையங்கங்கள், செய்திக் குறிப்புகள், அறிக்கைகள் முதலானவையும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் 1926 முதல் 1973 வரையான நீண்ட காலத்தினூடாகப் பயணித்த பெரியாரின் சாதி ஒழிப்பு வாதத்தை முழுமையாக உருதிரண்ட தோற்றத்தில் காட்டுகின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days