நாத்திகமும் பெண் விடுதலையும்

Publisher:
Author:

99.00

நாத்திகமும் பெண் விடுதலையும்

99.00

‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலர் பெண்களின் மீது திணிக்கப்பட்டு
வந்த அடிமைதனத்தை ஒழிக்கவும், சடங்கு சாங்கியம் எனும் மூடநம்பிக்கைகளை விலக்கவும் போராடினார். பெண் அடிமைத்தனம் கூடாது எனும் நோக்கில் முதன்முதலாக பெண்விடுதலை மாநாட்டை முன்னெடுத்தார்.

பெண் அறிவாலும், ஆற்றலாலும் முன்னேறி அடிமை எண்ணத்தை
முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்ற கருத்திழைத்து பெண் கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறி வந்தார்

கல்வியின் பெருமையை, அறிவின் ஆற்றல், வீரத்தின் வெளிப்பாட்டை, பெண்கள் வெளிக்கொணர வேண்டுமென பெண் கட்டாயக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். எழுத்துரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை என சமவுரிமை பெறுவதற்குரிய சட்டம் இயற்ற வேண்டும் என பெண் விடுதலைக்கான கருத்தையும் முன்வைத்தார்.

” அடிமை எண்ணத்தை அகற்றிடுவோம்; பெண் ஆளுமை வீரத்தை வெளிக் கொணர்வோம்” என்றும்

பெண் விடுதலைக்கான முழக்கத்தை பரப்புரைத்து வந்தார்.

பெண் விடுதலை என்ற சொல் கொண்டு அடிமையெண்ணத்தை
அகற்றியெறியும் ஆயுதமாகவும் பகுத்தறிவை வென்றெடுக்கும்
கருவியாகவும் மடமையை அகற்றி புதுமையை புகுத்தும் கருத்துப் பேழையாகவும், பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக
கட்டுரைகளையும், காவியங்களையும், சொற்கருத்துக்களையும்
‘மண்ணில் விதையென விதைத்தார்.

உள்நெறி, புறநெறி, அறநெறி எனும் கருத்துக்களைக் கடைந்து
பெண்நெறிதனைப் போற்றும் எண்ணத்துடன் “நாத்திகமும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்நூல், பெண் அடிமைத்தனத்தை முற்றிலுமாக ஒழிக்ககூடிய அறிவாயுதமாகும்.

– கவிஞர் பி.ஜி.ஆனந்தன்

Delivery: Items will be delivered within 2-7 days