நீங்களும் செஃப் ஆகலாம்!

Publisher:
Author:

Original price was: ₹250.00.Current price is: ₹240.00.

நீங்களும் செஃப் ஆகலாம்!

Original price was: ₹250.00.Current price is: ₹240.00.

தென்னிந்தியாவின் சுவை மிகுந்த, வயிறுக்கு இதமான உணவாக விளங்குவது இட்லி. பெரும்பாலும் காலைச் சிற்றுண்டியில் இட்லி தவறாமல் இடம்பெற்றுவிடும். அதேபோல் பொசு பொசு பூரியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதால் ஒரே வகையான பூரியை தயார் செய்து கொடுப்பதில் அலுப்பேற்படும் அம்மாக்களுக்கு! எல்லோரும் விரும்பி உண்ணும் இட்லியில் இத்தனை வகைகளா என வியக்கும் வகையில் மசாலா இட்லி, சில்லி இட்லி, பர்கர் இட்லி, சான்விட்ச் இட்லி என இன்னும் பல வகையான இட்லி செய்முறையும் விளக்கும் இந்த நூல் வழக்கமான சமையல் நூல்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது. பூரியில், காய்கறிகள் சேர்த்துச் செய்யும் பூரி, மசாலா பூரி, குழந்தைகளைக் கவரும் வண்ண வண்ண நிறங்களில் செய்யப்படும் பூரி வகைகள் செய்முறைகளும் இட்லி, தோசை பொடிகளை இரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த எப்படி தயார் செய்வது, சாம்பார், ரசப்பொடிகள் தயார் செய்வது, உடலுக்குப் புத்துணர்வூட்டும் பானங்களான தேநீர், காபி செய்முறைகள் பற்றியும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்க சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகள் செய்வது பற்றியும். கோதுமை மாவு, அரிசி மாவு வகைகளைப் பயன்படுத்தி பல்வேறு சுவைகளை எப்படிக் கொண்டுவரலாம் என்பது பற்றி ‘கிச்சன் பேசிக்ஸ்’ எனும் தலைப்பில் அவள் விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. செய்முறைகளை காணொளியில் காண வீடியோ இணைப்பு லிங்க் கொடுக்கப்பட்டிருப்பது இந்த நூலுக்கு மேலும் ஒரு சிறப்புச் சேர்க்கிறது. இட்லி, பூரிகளை வகை வகையாகச் செய்து அசத்தலாம் வாங்க…

Delivery: Items will be delivered within 2-7 days