பெருவலி

Publisher:
Author:

205.00

பெருவலி

205.00

Peruvali
Sukumaran

 

முகலாயப் பேரரசர் ஷாஜகான் அவருடைய மகன் அவுரங்கசீப்பால் சிறை வைக்கப்படுகிறார். அவுரங்கசீப்பின் சகோதரி ஜஹனாராவும் தனது தந்தையுடன் சிறையிலிருக்கிறாள். அவள் எழுதிய நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். 
ஷாஜகானின் மகன்கள் தாரா, முராத், அவுரங்கசீப் ஆகியோருக்கிடையில் நிகழ்ந்த அதிகாரப்போட்டியின் காரணமாக நிகழும் நிகழ்வுகளே நாவல் எனினும், அவற்றையும் தாண்டி நாவல் சொல்லும் செய்திகள் அதிகம். 
ஜஹனாரா அறிவும், பல திறமைகளும் உள்ள பெண்ணாக இருந்தாலும், அவளால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைப் பற்றி கனவிலும் நினைக்க முடியவில்லை. பெண் என்பதால் அவள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் எப்படி பின் தள்ளப்பட்டாள் என்பதையும், ஓர் உயிர் என்ற அளவில் அவளின் இயல்பான தேவைகள் எவ்வாறு மறுக்கப்பட்டன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 
தனது சகோதரன் தாராவை வீழ்த்திய அவுரங்க சீப், தாராவின் இரு மனைவியர்களின் மீது ஆதிக்கக் கரங்களை விரிக்க, முதல் மனைவியான ராணா தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது என நாவலை வாசிக்கும்போது அக்கால அரச குடும்பப் பெண்களின் அவலநிலை மனதைக் கலங்க வைக்கிறது. 
அதிகாரத்தைப் பிடிக்க, தக்க வைத்துக் கொள்ள எந்தவிதமான அறநெறியுமற்று, என்ன வேண்டுமானாலும் செய்வது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு சாபமோ என்ற எண்ணம் இந்நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. 
நூலாசிரியர் நல்ல கவிஞர் என்பதால், நாவலின் பல பகுதிகளில் கவிதை மின்னல்களின் பளிச்சிடலில் மெய்மறந்து போகிறோம். 

நன்றி – தினமணி 

Delivery: Items will be delivered within 2-7 days