சாதியின் குடியரசு

Publisher:
Author:

Original price was: ₹350.00.Current price is: ₹325.00.

சாதியின் குடியரசு

Original price was: ₹350.00.Current price is: ₹325.00.

ஆனந்த் டெல்டும்டே நாடறிந்த அறிஞர். தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் பொதுவான நண்பர், தோழர், விமர்சகர். ஃபாசிச சக்திகளின் தாங்கவியலாத எதிரி. அவர்கள் அச்சம் கொள்ளும் ஆளுமைகளில் ஒன்று. எந்தவொரு பெரிய அமைப்பு பலமுமில்லாமல் தனது கருத்துகள், அதன் தெளிவான வெளியீட்டுத் திறன், வலிமையான பேனா ஆகியவற்றைக் கொண்டே அவர் தனது நண்பர்கள், தோழர்கள், எதிரிகள் அனைவரையும் பெற்றுள்ளார். ‘சாதி’ குறித்து அவரது ‘நுண்மான் நுழைபுலம் கொண்ட’ சிந்தனை இந்த நூலின் பக்கங்களில் விரிகின்றது. காய்தல் உவத்தல் இல்லாத அவரது விமர்சனங்கள், பார்வைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்பவர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் ‘சாதி’ குறித்து சிந்திக்கும் எவரும் தவிர்க்கவியலாத பேனா ஆனந்த் டெல்டும்டேயின் பேனா. பாரதி புத்தகாலய ஆசிரியர் குழு தன் பங்கிற்கு ஏற்பும் மறுப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கனத்த விவாதத்திற்கான சட்டகத்தையும். இறைச்சிப் பொருளையும் வழங்கும் இந்நூலை தமிழில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

வெளிச்சமளிக்கு நூல்.. சரியான நேரத்தில் தட்டி எழுப்பும் நூல் – ஜூன் டிரிஸ்

நாம் அனைவரும் மிக்க கவனத்துடன் வாசிக்க வேண்டியவை அறிஞர் டெல்டும்டேவின் நூல்கள் – அருந்ததி ராய்

டெல்டும்டேயின் கொலைக்களத்தில் இந்தியப்புரட்சி பட்டை தீட்டப்படுகின்றது – விஜய் பிரசாத்

 

Delivery: Items will be delivered within 2-7 days