சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

Publisher:
Author:
(1 customer review)

200.00

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

200.00

அகழ்வாய்வு, மொழியியல், புவியியல், மேலும் சமூகவியல் போன்றவற்றின் அடிப்படையில் சிந்துவெளிப் பண்பாட்டைப் பற்றிய உறுதியான சான்றாதாரங்களையும் கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்துத் தன்னுடைய முடிவுகளை அழுத்தமாக முன்வைக்கிறார் பாலகிருஷ்ணன்.

தன்னுடைய புதிய கருத்துகளை மொழியியல், சிந்துவெளி நகர அமைப்பு ஆகிய இரண்டு அடிப்படைகளின் மேல் நிறுத்தி விவாதிக்கிறார் பாலகிருஷ்ணன். தமிழில், அநேகமாக அனைத்து திராவிட மொழிகளிலும், மேல் என்றால் மேற்கு, கீழ் என்றால் கிழக்கு என்ற பொருள் இயல்பானது. இந்த மொழியியல்பின் அடிப்படையிலான எண்ண ஓட்டத்தில் தங்கள் நகர அமைப்புகளை சிந்துவெளி மக்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான ஆதாரங்களை ஈரான், ஆஃப்கானிஸ்தான், பலோசிஸ்தான், பாகிஸ்தான் முதல் இந்தியாவின் மகாராஷ்டிரம் வரை அமைந்திருக்கும் பகுதிகளில் உள்ள சிந்துவெளி நாகரிகத் தடய நகரங்களின் மூலைமுடுக்குகளைத் தேடி, தரவுகளையும் தகவல்களையும் அலசி வடிகட்டித்தருகிறார் பாலகிருஷ்ணன். அகழ்வாய்வின் மூலம் நமக்குத் தெரியவந்திருக்கும் மாநகரங்களான மொஹஞ்சதாரோ-ஹரப்பாவும் சரி, சிறு நகரங்களான ஸூர்கோட்டா மற்றும் ஸூட்காஜென்தோர் ஆனாலும் சரி, அனைத்து சிந்து சமவெளி நகரங்களிலும் மேடான, உயர்ந்த மேற்குப் பகுதிக் கட்டிட அமைப்புகளும், தாழ்வான கிழக்குப் பகுதிக் குடியமைப்புகளும் காணப்படுகின்றன. இந்த அமைப்புகள் எதேச்சையானவை அல்ல. முன்யோசனையின் விளைவு என்று முறையான ஆதாரங்களைக் கொண்டு வாதிடுகிறார் பாலகிருஷ்ணன்.

மேல்-கீழ், முன்-பின்

திராவிட மொழிகளில் மட்டுமே புவிமைய (topo-centric) அடிப்படையில் திசை சுட்டும் சொற்கள் அமைந்துள்ளன. சம்ஸ்கிருதம் மற்றும் அது சார்ந்த இந்தோ-ஆரிய மொழிகளில் திசை சுட்டும் சொற்கள் மனிதமைய (anthropo-centric) ரீதியில் அமைந்திருப்பதை பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். மனிதமைய நோக்கின் காரணமாக, இந்தோ-ஆரிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோரின் சிந்தனையில் கிழக்கு என்பது ‘முன்’ என்றும், மேற்கு என்பது ‘பின்’ என்றும் உணரப்படுகின்றன. இந்த உணர்வு சிந்துவெளி நகர அமைப்பில் வெளிப்படுவதில்லை என்பதை ஒப்பிட்டுக் காண்பிக்கிறார் பாலகிருஷ்ணன். சிந்துவெளி ஊர்ப் பெயர்களிலும் ‘முன் – பின்’ தடயம் காணப்படவில்லை. மாறாக, ‘மேல் கீழ்’ பெயர்கள் ஏராளமாகத் தென்படுகின்றன என்ற உண்மையைப் புள்ளிவிவரப்படுத்தி அட்டவணைகள், அட்ச-தீர்க்க ரேகைகளுடன் வழங்குகிறார்.

– இந்து தமிழ் திசை

Delivery: Items will be delivered within 2-7 days