திரும்பிப்பார்!

Publisher:
Author:

20.00

திரும்பிப்பார்!

20.00

இந்நூல்
தமிழக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி “இளைஞர்களுக்கு வழி விடுவோம்!” என்ற
தலைப்பில் தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில்
தொடர்ந்து எழுதி வந்த கடிதங்கள் நூல் வடிவில்
வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, மாநாடு
தொடர்பாக சில கடிதங்கள் தலைவர் கலைஞர்
எழுதியுள்ளார்.

தி.மு.கழகம் தொடங்கப்பட்ட பிறகு, நடைபெற்ற முதல்
மாவட்ட மாநாடு 1950ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின்
சார்பில்தான் நடத்தப்பட்டது. அந்த முதல் மாவட்ட மாநாட்டின்
தலைமைப் பொறுப்பினை ஏற்ற பெருமைக்குரியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தாம். அந்த முதல் மாவட்ட மாநாடு
தொடங்கி தற்போது நெல்லையில் நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு வரை கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட
அனைத்து மாநாடுகளிலும் தலைவர் கலைஞரின் பங்களிப்பு
இருந்து வருகிறது.

எந்த ஒரு இலட்சியத்தினை முன்னிறுத்தி தந்தை
பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வழியில் தலைவர்
கலைஞர் அவர்கள் ஏறத்தாழ எழுபது ஆண்டுக் காலம்
நடைபோட்டு வந்திருக்கிறாரோ, அதே இலட்சியத்தை
முன்னெடுத்துச் செல்ல இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும் என்னும் உணர்வோடு அவர்களுக்குத் தான் நடந்து வந்த
பாதை மலர் பாதை அல்ல, முட்புதர், அதனைக் கடந்துதான்
இந்த நிலைக்கு வர இயன்றது என்பதை விளக்கிச் சொல்லி,
தமிழின் மேன்மையுற தி.மு.கழக இளைஞர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்திடத் துணிதல் வேண்டும் என்று தனது விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் விடுத்துள்ள
செய்திகளைத் தாங்கி வந்துள்ள உடன் பிறப்புக்காக பத்து கடிதங்களின் தொகுப்பு சிறு நூலாக கழக இளைஞர் அணியின் சார்பில் வெளியிடப்படுகிறது.

– தி.மு.க. இளைஞரணி

Delivery: Items will be delivered within 2-7 days