₹20.00
கம்யூனிஸ்டுகளின் கதி என்ன?
அண்மையில் ‘லண்டன் டைம்ஸ்” பத்திரிகை”கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்படும் கதி என்ன?” என்ற தலைப்பில் சில புள்ளி விவரங்களைத் திரட்டித் தந்திருந்தது.
1936ம் ஆண்டு முதல் பதவி வகித்திருந்த ரஷ்ய மந்திரிகள் 21 பேர்களில் 9 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மத்திய நிர்வாகக் கமிட்டித் தலைவர்கள் 7 பேரில் 5 பேர் இது போலவே மரணமடைந்தார்கள்.
கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய இயக்கத்தின் செயலாளர்கள் 55 பேர்களில் 43 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1936ம் ஆண்டு அரசியல் சாசனத்தை உருவாக்கிய மேல்மட்டக் கம்யூனிஸ்டுகள் 27 பேர்களில் 15 பேர் நிற்கவைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
சோவியத் யுத்தக் கவுன்சிலின் உறுப்பினர்கள் 80 பேர்களில் 70 பேர் மரண தண்டனையால் மாண்டனர்.
1917ம் ஆண்டு முதல் சோவியத் ராணுவத்தின் மார்ஷல்களில் 60 சதவீதம் பேர் உளவாளிகள் என்றோ துரோகிகள் என்றோ பட்டம் சூட்டப்பட்டுச் சுடப்பட்டார்கள்.
சாமானியர்களுக்கு நேர்ந்த கதிபற்றி எவ்வித ஆவணங்களோ, பதிவுகளோ கிடையாது.
நம் நாட்டிலுள்ள கம்யூனிஸ்டு கைப்பாவைகளுக்கு என்ன கதி நேருமோ என்று வியப்படைகின்றோாம்.
– லண்டன் டைம்ஸ்
Reviews
There are no reviews yet, would you like to submit yours?