வான் மண் பெண்

Publisher:
Author:

145.00

வான் மண் பெண்

145.00

உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சிறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவாழ வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம். காலம் மாற மாற பெண் அடிமைப்படுத்தப்பட்டாள். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, மனிதனின் பேராசையால் திசைமாறியது. காடுகள் அழிகப்பட்டு, நிலம் துண்டாடப்பட்டு, நீராதாரங்கள் பாழ்படுத்தப்பட்டன. சுற்றுச்சூழல் சீர்கெடத் தொடங்கியது. ஆனால், அந்தச் சீர்கேடு கண்டு சட்டென விழித்துக்கொண்டவர்களும் பெண்களே. இயற்கையைக் காக்கும் முனைப்பில் பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

தங்கள் உயிருக்கு நிகரான மரங்கள் வெட்டப்பட்டபோது கோடரிக்குக் கழுத்தைக் காட்டி நின்ற பெண்களின் தொடர்ச்சியாக, உலகம் முழுவதும் சில பெண்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எதிராகவும் இயற்கையைப் பாதுகாக்கவும் பணியாற்றத் தொடங்கினர். அப்படிப் போராடத் துணிந்த பெண்களின் வாழ்வையும் போராட்டத்தையும் ஆவணப்படுத்தியிருக்கிறார் ந.வினோத்குமார். சுற்றுச்சூழல் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் இவர், ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சூழலியல் பெண்ணியவாதிகள் குறித்துப் பேசும் இந்தப் புத்தகம் தமிழில் முதல் முயற்சி.

உலகின் முன்னோடி சூழல் போராட்டங்களில் தொடங்கி தற்போது நம்மிடையே செயல்பட்டுவரும் சூழல் போராளிகள்வரை பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் குறித்தும் இந்த நூல் பேசுகிறது. தகவல் களஞ்சியமாக மட்டும் நின்றுவிடாமல், அந்தப் பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் எதிர்கொண்ட சிக்கல்களையும் மீண்டெழுந்த சாதனையையும் தெளிவான விவரிப்பில் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது நூலின் தனிச் சிறப்பு.

Delivery: Items will be delivered within 2-7 days