விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்

Publisher:
Author:

95.00

விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்

95.00

Vilimpunilai Makkalin Poraattankal
Raj Gowthaman

 

சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும், அதேவேளையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரைவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவமைத்திட இக்கட்டுரைகள் கருத்துகளை வழங்கக்கூடும். இனக்குழுக் கலாச்சார மரபு ஆழமாக வேர்பிடித்துள்ள ‘இந்திய’ உபகண்டச் சமூகங்களின் ஆழ்மனங்களில் எதார்த்தங்களைக் காட்டிலும் அவைபற்றிய புனைவுகள் வலுவாக இயங்குகின்றன. சாதி மதம் முதலான சழக்குகள் நூற்றாண்டுக் காலங்களாக வீரியம் பெற்று வந்துள்ளன. இதைப் புரிந்துகொள்ளுவதற்கும் மாற்றுவதற்கும் அறிவியலும் நாத்திகமும் வரலாற்றுப் பொருள்முதல் நோக்கும் மட்டும் போதாது. ஒருபுறம் தேசத்தின் வளங்கள் கொள்ளை போகின்றன. ஆனால் இங்கே பெரும்பாலான சமூகங்கள் சாதி மதச் சடங்குகளிலும் நேர்ச்சை நிறைவேற்றங்களிலும் போதைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன; வர்க்கங்களாகத் திரள இயலாதவாறு மாயப் புனைவுகளில் மாட்டிக்கொண்டுள்ளன. இக்கட்டுரைகளை வாசிக்கிறபோது இவற்றைத் தாண்டிச் சென்று சுயபரிசோதனைகளைச் செய்யவேண்டியது அவசியம் எனத் தோன்றும். இக்கட்டுரைகள் பலவும் பல பரிமாணங்கள் உடையவை.

Delivery: Items will be delivered within 2-7 days