ஸ்ரீ வேதாந்த தேசிகர்

Publisher:

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

ஸ்ரீ வேதாந்த தேசிகர்

Original price was: ₹300.00.Current price is: ₹280.00.

வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவரான…

‘வேதாந்த தேசிகர் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வேங்கட நாதனாக அவதாரம் பெற்று, ஸ்வாமி தேசிகனாக ஆகர்ஷணம் செய்யத் தொடங்கி இன்று வரை பக்தர்கள் அனைவரையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறார். இம்மகானின் புகழ்தாங்கி வரும் இந்த தெய்வீகப் பயணத்தில், ‘தமிழ் திசை’ பதிப்பகம், இந்நூலின் வழியே அவரது அருளைப் பெற்று உய்வதற்கான வழியைச் சொல்லும் பேறு பெற்றுள்ளது.

‘வேதாந்த தேசிகர் – ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற தலைப்பிலான இப்புத்தகம் உருவாக உறுதுணை நின்றோர் அநேகம். அதில், உ.வே. வில்லூர் நடாதூர் பாஷ்ய சிம்ஹாசனம் கருணாகராசாரியார் அவர்களின் பங்கு தனித்துக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. ஸ்வாமி தேசிகரின் பல்வேறு பரிமாணங்களில் எதையெல்லாம் கட்டுரை ஆக்கலாம் என்பதில் தொடங்கி, யாரிடமெல்லாம் அக்கட்டுரைகளைக் கேட்டுப் பெறலாம் என்பது வரை அவரது ஆழ்ந்த ஞானத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். பல்வேறு ஆன்மிகப் பணிகளுக்கு நடுவில் இப்புத்தகத்தில் இடம் பெற்ற கட்டுரைகளையும், புகைப்படங்களையும் மேற்பார்வையிட்டு, அவற்றை செம்மைப்படுத்திக் கொடுத்து அரும் தொண்டு புரிந்தார். இப்புத்தகத்துக்கு இரண்டு அற்புதமான கட்டுரைகளையும் எழுதிக் கொடுத்து நூலுக்கு மேலும் மதிப்பு கூட்டி உள்ளார்.

வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவரான ‘ வேதாந்த தேசிகர், கி.பி. 1268-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தூப்புல் என்னும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாகப் பிறந்த தத்துவ வித்தகர் ஆவார். ஸ்வாமி தேசிகன், தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபயவேதாந்தாச்சாரியர், கவிதார்க்கிக ஸிம்மம், ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் என்னும் பெயர்களால் போற்றப்படும் இவரின் திவ்ய சரித்திரத்தை, எளிய நடையில் நாமெல்லாம் அறிந்து மகிழும் வண்ணம் எழுதி அருளியுள்ளார் முனைவர் உ.வே. மு.வ. அனந்தபத்மநாபாச்சார்யார் ஸ்வாமி.

மேலும், இப்புத்தகத்தில் அரிய அறிஞர்களான ‘ உ.வே. துஷ்யந்த் தர், ‘மத் ரஹஸ்ய த்ரயஸாரம்’ என்ற தலைப்பிலும், ‘தேசிகரின் தமிழ் சொற்கள்’ என்ற தலைப்பில் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணனும், அமலனாதிபிரான் வியாக்யானம் குறித்து முதுமுனைவர் ம.அ. வேங்கடகிருஷ்ணனும் கட்டுரைகள் வடித்துள்ளனர். மேலும், பேராசிரியர் தி. இராசகோபாலன், நாவல்பாக்கம் வாசுதேவாச்சார்யர், பேராசிரியர் கே.இ.தேவநாதன், திருமலை சங்கபுரம் வேனியநல்லூர் நாராயணதாஸன், திருவயீந்தை மாலோலக்கண்ணன், பழவேரி வில்லிவலம் லக்ஷ்மி நரஸிம்ம தாஸன், முனைவர் வ.ஸௌம்யநாராயணன், டாக்டர் எஸ்.பத்மநாபன் ஆகியோர் கட்டுரை அளித்து சிறப்பு சேர்த்துள்ளனர்.

‘வேதாந்த தேசிகரின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த தலங்களான திருத்தண்கா, காஞ்சிபுரம், திருவஹீந்திரபுரம், சத்யாகாலம், திருவல்லிக்கேணி, ‘ரங்கம், திருப்பதி ஆகியவை இந்த நூலில் புகைப்படங்களாக விரிந்து கண்ணுக்கும், காட்சிக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக… வண்ண வண்ணமாய் மிளிர்ந்துள்ளன. வினோத் ரங்கநாதன், சுந்தர வரதன், உத்திரமேரூர் னிவாஸன் ஆகியோர் தகுந்த நேரத்தில் புகைப்படங்களை அளித்தது புத்தகம் விரைவில் வெளிவர பேருதவியாக இருந்தது. ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய தகவல்களின் தொகுப்பாகவே விளங்கும் இப்புத்தகம், ஒரு காலப்பெட்டகம் – கைக்கு வந்த பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. வேதாந்த தேசிகரே இப்புத்தக ரூபமாக வந்திருந்து, ஒவ்வொரு இல்லத்துக்கும் பிரகாசம் சேர்ப்பார் என்பது திண்ணம்.

உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் தொடந்திருக்க.. ‘தமிழ் திசை’ பதிப்பகம் வாயிலாக இன்னும் இதுபோல் பல ஆன்மிகப் படைப்புகளைத் தொடர்ந்து அளிக்கக் காத்திருக்கிறோம்.

Delivery: Items will be delivered within 2-7 days