1 review for 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Rated 4 out of 5
இல. வேந்தன் –
உண்மையிலேயே தமிழகத்தை சார்ந்த ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குடும்பங்களும் திராவிடர் கழகத்திற்கும் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல் எந்த சமூகம் இவர்களால் பயன்பெற்றதோ அவர்களே ‘போலி’ தமிழ்தேசியவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, சுயஜாதி சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு பெரியார் துரோகி என்றும் திராவிடம் துரோகம் என்றும் வன்மம் கக்குகிறார்கள் வளர்ந்த கடாக்கள். இட ஒதுக்கீட்டினால் கல்வி பெற்று ஜனநாயக நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான / மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காக நல்ல நோக்கத்திற்காக கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடு சமத்துவ சிந்தனையை விதைத்து நல்வழிபடுத்துகிறது என்பதற்கான அறிகுறி தெரியவில்லை. ஏனெனில் தாங்கள் பார்ப்பனரால் ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் இவர்கள் தான், இன்னொரு புறம் நாங்கள் ஆண்ட பரம்பரையினர் என்ற மமதையோடு தலித் மக்களை ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த போக்கு பிற்படுத்தப்பட்ட / மிக பிற்படுத்தப்பட்ட இடை நிலை ஜாதிகளிடம் குறைந்தபாடில்லை.
நூலின் இறுதியில் இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் போது முன்னாள் குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் சர்மா கூறியதை குறிப்பிட்டதும் அதற்கு முன்னாள் பிரதமர் வி.பி சிங் அவர்களின் பதிலும் இணைத்திருந்திருந்தது முத்தாய்ப்பு. சங்கர் தயாள் சர்மா, “நீங்கள் பிராமணர்களிடம் இருந்து பதவிகளை பறித்து விடலாம். ஆனால் அவர்களின் மூளையை ஒருபோதும் பெற முடியாது” என்றாராம். அதற்கு பதிலாக முன்னாள் பிரதமர் விபி.சிங் சொன்னாராம் “அந்த பிராமண மூளை எங்களுக்கு வேண்டவே வேண்டாம்”.. என்று.
தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இட ஒதுக்கீடு வரலாறு பற்றி அனைவரும் படிக்க வேண்டிய ஆவணப்புத்தகம் தான் “இட ஒதுக்கீடு சட்டம் – ஏன் எப்படி எவரால்?”.