Description
அம்பேத்கர் தம் வாழ்நாளில் முன்வைத்த துடிப்பான செயல்திட்டங்களுக்கெல்லாம் இந்துக்கள் எதிர்வினையாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்தப் பதற்றத்தில் இருந்து இன்று வரை மீளாத இந்து சங்பரிவாரங்கள், அம்பேத்கர் முன்வைத்த செயல்திட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் மறைவுக்குப் பிறகும் – அணைய மறுத்து நெருப்பெனப் பற்றிப் பரவும் அவர்தம் தத்துவத்தை – அணைக்க முயல்கின்றனர். ஒரு தத்துவத்தை மோதி அழிக்க முனைவதும் அரவணைத்து அழிக்க முயல்வதும் ஒரே சூழ்ச்சியின் இரு பக்கங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை எதிர்த்தோ, உள்ளிழுத்தோ ஒருபோதும் நீர்த்துப்போக வைக்கவோ, அழித்துவிடவோ முடியாது என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நாம் நிற்கிறோம்.
– பதிப்புரை
Reviews
There are no reviews yet, would you like to submit yours?