கண்டி வீரன்

Publisher:
Author:
(1 customer review)

180.00

கண்டி வீரன்

180.00

2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில்
எதிர்கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.

நவீனத்துவம் என்கிற உலக இலக்கியங்கள் பயணித்த பாதையில் ஷோபாசக்தி முன்வைக்கும் கதைகள், இனவுரிமை முழக்கங்களையெழுப்பி தன்னை முன்னிறுத்திக் கொண்ட எந்தவொரு அரசியல், இலக்கியவாதிகள் பதிவு செய்யாது
நழுவிக் கொண்ட மனித வாழ்வை சித்திரங்களாய் கொண்டிருப்பவை. ஆன்மாவை பறித்துக் கொண்டு அம்மணத்தை பரிசளித்த இயக்கப் பெருமிதங்களை குலைத்த ரூபங்கள், கற்பு, ஆண்மை போன்ற தேச, தேசிய, தமிழ் ஜம்பங்களை விட்டு விலகி பயணிப்பவை.
பனைமரத் தீவொன்றிலிருந்து போரின் திசை வழியில் வெளியேறிய தமிழ் மனமொன்று, உலக சமூகங்களுக்குள் நின்று தனது அரசியல், பண்பாட்டு மோதலை நிகழ்த்திக் கொள்வதோடு அதன் அனுபவத்தை உலகிற்கு வழங்க வல்லவையாகவும் இருக்கக் கூடியது ஷோபாசக்தியின் சிறுகதைகளும் நாவல்களும். அதனால்தான் மிகக் குறுகியக் காலத்தில் அவரது “ம்”, “கொரில்லா”, “எம்.ஜி.ஆர் கொலை வழக்கு” போன்ற ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலக வாசகர்களை சென்று சேர்ந்துள்ளன.

Delivery: Items will be delivered within 2-7 days