கொரியாவின் தமிழ் ராணி

Publisher:
Author:

100.00

கொரியாவின் தமிழ் ராணி

100.00

” தமிழ்ப்பணியை நவீன காலத்தில் உரிய வகையில் செய்துவரும் ஆய்வாளரும் ஆர்வலருமான முனைவர் நா. கண்ணன், தமிழர்களுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான உறவுக்கான மற்றுமொரு களத்தை இந்த நூலின் வாயிலாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். கொரிய சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையிலான வரலாற்று, கலாச்சார தொடர்புகளை தனது ஆய்வுப் பயணத்தினூடாக கண்டறிந்த கண்ணன், அந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஆற்றுப்படை நூல்தான் இது.

நமது தொன்மம் குறித்து நமக்கிருக்கும் பெருமிதங்களை ஆய்வு வழியாக உலகம் ஏற்கும்போது, அந்த வரலாற்றுப் பெருமிதங்கள் நம் சமூகத்துக்கு மிகப்பெரிய ஆயுதங்களாகவும் மாறும். கண்ணனின் இந்த ஆய்வுப் பயணம் அதைத் தேடிச் செல்கிறது. முனைவர் நா. கண்ணனுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை மட்டுமல்ல, இந்த நூலும் சிறப்புச் சேர்க்கும் ஒன்றுதான்.”

Delivery: Items will be delivered within 2-7 days