மண் மக்கள் மகசூல்!

Publisher:
Author:

135.00

மண் மக்கள் மகசூல்!

135.00

மண்ணை அன்னையின் இடத்தில் வைத்துப் போற்றும் சமூகம் நம் தமிழ்ச் சமூகம். அதனால்தான் பிறந்த இடத்தை தாய்மண் என்கிறோம். வெறும் மண்ணையே மருந்தாக்கியவர்கள் நம் கிராமத்து முன்னோர்கள். வயல்வெளிகளில் நடந்துபோகும்போது, காலில் கல்லோ முள்ளோ பட்டு காயம் ஏற்பட்டால், கொஞ்சம் மண்ணை அள்ளி அந்தக் காயத்தின் மீது போட்டவர்கள் அவர்கள். அந்த அளவுக்கு அப்போதிருந்தது மண் நலம். ஆனால், இன்று விவசாய மண் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகிவருகிறது. காரணம் இயற்கை விவசாயத்தை விட்டு விலகி, மண்ணை வீணாக்கும் மருந்துகளை மண்ணில் கலப்பதுதான். ஆனால், மீண்டும் தற்போது இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் விழிப்புஉணர்வு விவசாயிகளிடையே பெருகி வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு மிகவும் தேவையாக விளங்கும் மண்புழுக்களும் பல நுண்ணுயிர்களும் அதிகம் உள்ள மண்ணே வளமான மண் என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள். மண் நலத்தைக் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் மண் வகைகள் பற்றியும் மண்ணுக்கு மண்புழுக்கள் செய்யும் நன்மைகள் குறித்தும் விளக்குகிறது இந்த நூல். மண்புழு உரத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் பயணித்து பரப்பிவரும் நூலாசிரியர், மண் நலன் காப்பது குறித்தும், இயற்கை விவசாயத்தின் தவிர்க்க இயலாத நண்பனாக விளங்கும் மண்புழுக்களின் வகைகள் பற்றியும் பசுமை விகடனில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. மண் நலம் காத்து, விவசாய வளம் பெருக வழிகாட்டுகிறது இந்த நூல்!

Delivery: Items will be delivered within 2-7 days