மலையாள சிறார் கதைகள்: பேரன்பின் பூக்கள்

Publisher:
Author:

350.00

மலையாள சிறார் கதைகள்: பேரன்பின் பூக்கள்

350.00

பேரன்பின் பூக்கள்:

மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ்பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருக்கிறார். உண்மையிலேயே, குழந்தைகளிடத்தில் பேரன்பு கொண்ட ஒரு பாட்டி, அவர்களை மடியில் இருத்தி ஊட்டும் இனிப்புகள் தான் இந்தக் கதைகள். எல்லாமே வீட்டுச் சூழலில் உருவான கதைகள். அதனால் இந்தக் கதைகளின் உலகம் குழந்தைகளுக்கு அந்நியமாவதில்லை. இவற்றை வாசிக்கும் ஒவ்வொரு சிறுவரும் தன் வீட்டில் நடக்கும் கதைகளாகத்தான் இவற்றை காண்பர். இவை அந்த அளவுக்கு குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் பிணைந்திருக்கின்றன. வீட்டில் இருப்பவர்களைப் போலவே பிராணிகளும், வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஆர்வமும் கவனமும் கொள்கின்றன. எழுத்தாளர் அவ்வளவு பொருத்தமாக பிராணிகளைக் கதாபாத்திரங்களாக்கி இருக்கிறார். அடுத்தடுத்து வரும் எல்லா கதைகளிலும் மிகுந்த சுவாரசியத்துடன் இந்தப் பிராணிகளைக் கதாபாத்திரங்களாக்கியபடி கதை சொல்லிச் செல்கிறார். குழந்தைகளிடத்தில், ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம்தான்’ எனும் கருத்தை வளர்ப்பதுதான் சுமங்களாவின் நோக்கம்.

– பிஜு விஜயன்

Delivery: Items will be delivered within 2-7 days