₹165.00 ₹155.00
தமிழ்நாட்டுச் சைவம், வைணவம் இரண்டின் பாரம்பரியம் வேறு! ஒற்றுமைதான் இதன் பாரம்பரியம்; வேற்றுமைதான் விதிவிலக்கு. தேவார மரபும் பிரபந்த மரபும் ஒன்று! ஆழ்வார்கள் மரபும் நாயன்மார்கள் மரபும் ஒன்று! ஏனென்றால் ஆதி சங்கரரின் அத்வைதத்திற்கு முந்தியது அப்பர் சம்பந்தரின் தேவாரம். இராமானுஜரின் விசிட்டாத்துவைதத்திற்கு முந்தியது ஆழ்வார்களின் பிரபந்தம்.
ART Nagarajan –
இந்த நூலை எனக்கு வழங்கி தேர்ந்த வாசகனாக்க முயற்சி செய்த
சந்தியா நடராஜன் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்திய மொழிகளில்
தமிழ் மொழியில்மட்டுமே,
ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முந்திய
பக்தி இலக்கியங்கள் உள்ளன.
சைவ சமயத்திற்கு
தேவாரம்,
வைணவ சமயத்திற்கு
நாலாயிர திவ்விய
பிரபந்தங்கள்.
சங்க காலம்,
பல்லவர் காலம்,
விசயாலயசோழன்,
இராசேந்திரன்,
முதலாம் குலோத்துங்கன், இராமானுஜர், மற்றும்
சோழர்கள் வீழ்ச்சி வரை
இவ்விரு சமயங்களும் என்னென்ன வளர்சிதை மாற்றங்கள் கண்டது
என்பதை தெளிவுற விளக்குகிறார்!
சோழர்கள் ஆட்சி தொடங்கி நாயக்கர்கள் ஆட்சி
முடியும் வரை தமிழகத்தின் சமூகம், பண்பாடு, மற்றும்
பொருளாதாரத் துறையில்
ஒரு முக்கிய இயங்கு சக்தியாக
உழுவோர்களும்,
உழுவித்து உண்போர்களுமாக ஒன்றாக இருந்தவர்கள்
இரண்டு பிரிவுகளாக பிரிந்து
இடக்கை, வலங்கை என்று
மக்கள் மோதிக்கொண்டு
மிகப் பெரிய கலவரங்களாக
மாறிக் கொண்டிருந்ததுதான்!
நாயக்கர்களின் ஆட்சியிலும்,
ஆங்கிலேயர் ஆட்சியிலும்,
விடுதலைக்குப் பின்னும்
சைவமும், வைணவமும்
தத்தம் சமயத்தை
தக்கவைத்துக் கொள்ள
செய்தது என்ன என்பது
இரண்டு சமயங்களில் ஈடுபாடு உள்ள மக்கள் ரத்தம் சிந்திய கலவரங்களை நம்முன்
நிகழ்த்தி காட்டுகிறார்!
இராமானுஜர் வைணவத்தில் சாதிக்கோ, தீண்டாமைக்கு இடமில்லை என்று சீர்திருத்தம் பேசினாலும், வழிபாட்டு முறைகளில், நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வந்தாலும், வேதத்தையும்,
வர்ணாசிரம முறைகளையும் விட்டு வெளியே வர
முடியவில்லை, இதுதான் சோகம் என்று ஆசிரியர் எழுதுகிறார்!
பத்தொன்பதிம்
நூற்றாண்டில்
வேத மதத்தையும்,
சமஸ்கிருதத்தையும்
“எதிர்த்த”
திராவிட இயக்கங்களின் முன்னோடியாக
சைவ சமய இலக்கியங்கள் இருந்ததை மிகத் துல்லியமாக இந்த நூலில் விளக்கியிருக்கிறார்
நூலாசிரியர்!
ஆழ்வார்களின் பிரபந்தத்திற்கு பிறகு வைணவம் பெற்ற
மகத்தான படைப்பு
கம்பனின் ராமாயணம் தான்.
பெரிய புராணம் சைவ இலக்கியமாக பார்க்கப்படுவது போல்
ராமாயணம் வைணவ இலக்கியமாகப் பார்க்கப் படுவதில்லை.
ராமாயணம் சோழர் மற்றும் சைவ எதிர்ப்புக்கு கம்பனின் ராமாயணம் ஓர் அடையாளம் என்கிறார்.
சோழ இளவரசி அமராவதி மீது காதல் கொண்ட கம்பனின் மகன் அம்பிகாபதி அரசனின் ஆணையால் கொலை செய்யப்பட்டடதால்
உருவான கோபமே,
கம்பன் சைவத்தின் ஆட்சியை வீழ்த்த வைணவத்திற்கு உதவும் வகையில் கல்யாண குணங்கள் நிறைந்த கல்யாணராமனை
தன் கவித்துவத்தால் முன்நிறுத்தினான்
என்றும் கதைகள் உண்டு என்கிறார்.
சமண, பெளத்த சமயங்களோடு
இவ்விரண்டு சமயங்களும் முரண்பட்டு இருந்தாலும் எதிர்த்து போராடியதில் ஒரே மாதிரியான வீச்சு இருந்ததை சுட்டிக் காட்டுகிறார்.
தங்களுக்குள் விதிவிலக்கான
ஒரு சில நிகழ்வுகளைத் தவிர
இரு சமயங்களுக்குள்
பெரியதான போராட்டங்கள் இல்லை என்கிறார்.
நாம் எந்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்,
தமிழகத்தில் மதங்கள் பல்வேறு ஆட்சிக் காலங்களில் தன்னை எப்படி தகவமைத்துக்கொண்டது என்பதை
இந்த நூலில் காண முடிகிறது.
நூலாசிரியர் மதங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலாகவே வழங்கியிருக்கிறார்.
இன்னும் விரிவான விபரங்களை அறிந்து கொள்ள
நூலை வாங்கி வாசியுங்கள்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
நாகராஜன்
வாசகர் வட்டம் மதுரை
03.04.2020.