சிவப்பு விளக்கு எரிகிறது

Publisher:
Author:

75.00

சிவப்பு விளக்கு எரிகிறது

75.00

பம்பாயின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் முறை கேடாக வாழும் இளம் பெண்களை, ஆசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் நேரில் சென்று கண்டிருக்கிறார். அப்பெண்கள், தங்களின் வாழ்க்கை வரலாறுகளை, சறுக்கி விழுந்ததற்கான காரணங்களை, ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றனர்.

இதில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் வரலாறும் மனதைத் தொட்டசைக்கவல்லது. இவ் வரலாறுகளில் உண்மை நிகழ்ச்சிகள் கற்பனையுடன் பின்னிப் பிணைந்து, இனம் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு எழுதப்பட்டுள்ளது. முறைகேடாய் வாழும் பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட ஆசாபாசங்கள், அவற்றின் விதவிதமான பாதிப்புகள், காதல் தோல்விகள், சலனங்கள் ஆகியவைகளை ஆசிரியர் உணர்ச்சியோடு, உயிர்த்துடிப்புள்ள நடையில் தினமணி கதிரில் தொடர்ந்து எழுதினார். வாசகர்கள் பெருவாரியாக ரசித்தனர்.

சமுதாயத்தின் குரூர பிடியில், சறுக்கி விழுந்த அப்பெண்கள் கூறும் வரலாறுகள், நம் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. எப்போதும் உள்ளம் உருகி, அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அப்பெண்களின் துயர வாழ்வுக்கு நாம் மனதார அனுதாப்படுகிறோம்.

ஸ்ரீவேணுகோபாலனின் படைப்புகள் ஒன்றுக்கொன்று தனித்தன்மை வாய்ந்தவை, வாழ்க்கையின் குறுக்கு வெட்டாய், உயிர்த்துடிப்பு ததும்பும் ஒரு வடிவமாக, தன் உணர்ச்சி மிக்க எழுத்தாற்றலால், இவ்வரலாறுகளை ஒரு உயர் சமுதாயக் கண்ணோட்டத்தோடு எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

Delivery: Items will be delivered within 2-7 days