யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்

Publisher:
Author:
(4 customer reviews)

250.00

யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்

250.00

நோபல் பரிசு பெற்றவர்கள், ஆஸ்கர் விருது பெற்றவர்கள், மிகப் பெரிய கலைஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் – எந்தத் துறையிலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பட்டியல் போடுங்கள். அதில் எத்தனை பேர் யூதர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். வியந்து போவீர்கள்! தமது சரித்திரம் முழுதும் எத்தனைக்கெத்தனை அவர்கள் கஷ்டப் பட்டார்களோ, அத்தனைக்கத்தனை சாதித்தும் இருக்கிறார்கள்!

உலகின் மிகப் புராதனமான மதங்களுள் ஒன்று யூதமதம்.

எகிப்திலிருந்து யூதர்கள் முதல்முதலில் பாலஸ்தீனை நோக்கி இடம்பெயர்ந்து வந்தது முதல் ஒவ்வொரு நாளும் போராட்டம் தான், யுத்தம்தான்.

வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக ஐரோப்பா முழுவதும் பரவி, இடம்பெயர்ந்துகொண்டே இருந்தவர்களுக்கு, இருபதாம் நூற்றாண்டு மிகுந்த சோதனைகளைக் கொடுத்தது. ஹிட்லரின் ஜெர்மனியில் கொத்து கொத்தாக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

தமது சரித்திரமெங்கும் அடித்துத் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த யூதர்கள், தமக்கென்று இஸ்ரேல் என்கிற தனிநாடு அமைந்தபிறகு, அந்த மண்ணின் பூர்வகுடிகளான பாலஸ்தீன் அரேபியர்களை அதேபோலத்தான் அடித்துத் துரத்தினார்கள்; இன்றும் துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் வன்மம், துவேஷம், குரோதம். அதனால் நிரந்தர யுத்தம். இன்னொரு பக்கம் சுய வளர்ச்சியில் கட்டுக்கடங்காத ஆர்வமுடன் அத்தனை துறையிலும் சாதனை படைக்கும் வேகம், ஆர்வம், மேலோங்கிய திறமை, அப்படியே படம்பிடிக்கிறது இந்நூல்.

யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது!

Delivery: Items will be delivered within 2-7 days